நீண்ட கால இடைவெளிக்கு பிறகு கிறுக்குவதில் மகிழ்ச்சி. குழந்தைகள் வந்த பிறகு நேரம் போதவில்லை பிளாக் எழுத நேரமும் கிடைப்பதில்லை. மீண்டும் எழுத முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்.
சரி பதிவிற்கு வருவோம். ஒரு நேர்காணலில் ஓட்டல் அதிபர் ஒருவர் தமிழர்கள் சோம்பேறிகள் அதனால் தான் வட இந்தியர்களை வேலைக்கு சேர்கிறோம் என்று. அதைப்பற்றிய என்னுடைய பார்வை இதோ.
ஆமா சார் நாங்க சோம்பேறிங்க தான் அதனால தான் வளர்ச்சி அடைந்த மாநிலமா இருக்கோம், அதிகமா வருமான வரி கட்டுறோம், நாட்டோட வளர்ச்சியில முக்கிய பங்கு வகிக்கிறோம்.
உங்களுக்கு ஒரு குட்டி சம்பவத்தே சொல்றேன். எனக்கு தெரிந்த ஒரு பவுடர் பேக்கிங் கம்பெனியில் வட இந்தியால ஒரு கிராமத்திற்கு போயி அங்கே இருக்கிற பஞ்சாயத்து தலைவருக்கு பணம் கொடுத்து வீட்டு ஒருத்தவன பிடிச்சு ரயில் ஏத்தி விட்டாங்க, அவனுங்க இங்க வந்து அந்த கம்பெனியில ஒரு குடிசை போட்டு 15 மணி நேரம் வேலை செய்வானுங்க எல்லாம் 18 - 22 வயசு பசங்க. முறையான பாதுகாப்பு வசதி (PPE) இருக்காது, ஓவர் டைம் கிடையாது. இது எல்லாம் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது எவனும் வாய தொறக்க மாட்டனுவ ஏன்ன சீப் லேபர், கொள்ளை லாபம். இதை நம்ப ஆளுங்க கிட்ட பண்ணிருந்த கேள்வி கேட்டு இருப்பானுங்க, கோர்ட் கேசுனு கொண்டு போயிடுவாங்க. இப்படி உயிருக்கு உத்திரவாதம் கொடுக்காத அடிமைத்தனம் பண்ற வேலைய செய்ய நாங்க கேள்வி கேட்ட நாங்க சோம்பேறியா? அப்போ உரக்க சொல்வோம் நாங்க சோம்பேறிகள் தான்.
பிகு: இந்தியா ஒரு சுதந்திர நாடு யாரு எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். என் பதிவு தமிழர்களை மட்டுப்படுத்தி பேசியதற்காக மட்டுமே!