சாலையில் நடைபாதையில் நடக்கும் நான் ஒரு நாகரிக கோமாளி
தெருவில் குப்பைத்தொட்டியில் குப்பைபோடும் நான் ஒரு நாகரிக கோமாளி
சிக்னலில் சிகப்பு விளக்கில் நிற்க்கும் நான் ஒரு நாகரிக கோமாளி
பூச்சிக்கொள்ளி குளிர்பானம் அருந்தாமல் தெருக்கடையில் தேநீர் அருந்தும் நான் ஒரு நாகரிக கோமாளி
சாலையில் அடிபட்டு பரிதவிக்கும் மனிதனுக்கு உதவி செய்யும் நான் ஒரு நாகரிக கோமாளி
பொது இடத்தில் சிறுநீர் கழிக்காமல் கழிப்பறை செல்லும் நான் ஒரு நாகரிக கோமாளி
தெருவில் எச்சி துப்பாமல் செல்லும் நான் ஒரு நாகரிக கோமாளி
பிறருக்கு இடையூறு இழைக்காமல் வீடு திரும்பும் நான் எப்போழுதுமே ஒரு நாகரிக கோமாளி
No comments:
Post a Comment