Saturday, December 16, 2017

டிஜிட்டல் தடயம் (Digital Footprint)







      நாம் இணைய தளத்தில் பதியும் தகவல் ஏதாவது ஓரிடத்தில் பதியப்படுகிறது அதை சில கருவிகள் மற்றும் ஹாக்கிங் அறிவுள்ள யாரும் எப்பொழுது வேண்டுமானாலும் திருடலாம்  இணையத்தில் எந்த தகவலையும் நிரந்தரமாக அழிக்க முடியாது.


     நான் அன்றாடம் பயன்படுத்தும் வங்கி பரிவர்த்தனைகள், ஆன்லைன் சாப்பிங், பேஸ்புக், வாட்சாப் தகவல்கள் அனைத்தும் இதற்க்கு விதிவிலக்கல்ல. Identify theft எனப்படும் ஆள்மாராட்டங்கள் இந்த டிஜிட்டல் தகவல்கள் மூலம் செவ்வனே நடைபெறுகின்றன.


     நீங்கள் என்றாவது யோசித்ததுண்ட நாம் கூகுளின் சற்றுமுன் தேடிய விவரங்கள் அனைத்தும் நாம் தற்சமயம் பார்க்கும் வெப்சைட்டில் விளம்பரமாக தெரியும் என்று. இதுதான் கூகுளின் வியாபாரம் ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு " Nothing is free in this world" இந்த உலகத்தில் இலவசம் என்பதே கிடையாது. இலவசமாக வரும் அனைத்தும் மறைமுகமாக எதையாவது கொண்டிருக்கும்.


    இதை நாம் தடுக்க இயலாது ஆனால் விழிப்புணர்வுடன் இருந்து நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம். எப்படி
1. உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை (Personal Information) இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும்.
2. ‎புரவுசிங் சென்டர்களின் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.
3. ‎ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது "https//" உள்ளனவா என உங்கள் புரவுசரில் சரிபாருங்கள்.


    இவைகள் ஓரளவிற்கு உங்கள் தகவல்களை திருப்படுவதை தவிர்க்கும்.
Remember "Internet is not safe and it is vulnerable to hacking"

No comments:

Post a Comment