Monday, December 18, 2017

வாய்விட்டு சிரிங்க






    அமைதியை கண்டு பொங்குறோமோ இல்லையோ ஆனா மனைவி நம்மள பார்த்துக் கொள்ள சொன்ன பால் பொங்கும் போது நாம பொங்கி போயி அனைக்கிலைனா நமக்கு பொங்கல் தான் மாப்ள!!!


   ஏழு ஜென்மத்துக்கு முன்னாடி நாம்  மனைவியை தவிர வேறு யாராலும் துல்லியமா சொல்ல முடியாது!!
அடங்கப்பா என்னா ஞாபக சக்தி!!


   பெண்கள் அவங்க கணவன் சோட்டா பீம் போல இருக்கணும்னு எதிர்பார்கிறாங்க ஆன நிஜத்தில் எல்லோரும் காளியா தான்.


   அனேகமா இந்த கிரிக்கேட்ட பெண்டாட்டிகிட்ட அடிவாங்குன எவனோதான் கண்டுபிடிச்சிருக்கனும்னு பச்சி சொல்லுது!
#அந்த பூரிகட்டையை கண்டுபிடிச்ச புண்ணியவான் வாழ்க


    இந்த ஷாப்பிங் போன மனைவியும் பாசஞ்சர் ரயிலும் ஒன்னுங்க. ஏன்னா இந்த  இரண்டுமே எல்லா இடத்திலும் நின்னுட்டு தான் போகும்.

   
கல்யாணம் பண்ணணும்னா ஒன்னு கட்டதுறை மாதிரி உடல் வலிமையா இருக்கனும் இல்ல கைப்புள்ள மாதிரி கால்ல விழ தெரிஞ்சிருக்கனும்!!


    மன்னிப்பு ரமணாக்கு வேணும்னா பிடிக்காத வார்த்தையா இருக்கலாம் ஆனால் எல்லா கணவன்களுக்கும் மிகவும் பிடித்த வார்த்தை மற்றும் சோறு போடும் வார்த்தை

No comments:

Post a Comment