Thursday, December 14, 2017

டிராஃபிக் சிக்னல்

      
    சென்னை போன்ற மாநகரத்தில் இது எதற்க்கு இருக்குன்னே தெரியல, பல பேருக்கு இந்த சிக்னல்ல இருக்கிற கலருக்கு அர்த்தம் தெரியுமானே தெரியல. நம்ம பொருத்த வரைக்கும் பச்சைனா அசுர வேகம், ஆரஞ்சுனா அதீத வேகம், சிகப்புனா மித வேகம்.

     இந்த மாதிரி மாநகரில வண்டி ஓட்ட நம்ம மக்கள் சில விதிமுறை வச்சிருக்காங்க.
1. யாருக்கும் வழிவிடக்கூடாது
2. ‎சிக்னலுக்கு முந்திக்கணும்
3. ‎போலிஸ் இருந்த நில்லு இல்ல கிளம்பு
4. ‎ஆம்புலன்ஸ பாலோ பண்ணணும்

    இந்த வழிமுறைகளை மின்பற்றலனா யாருகிட்டையாவது சாவு கிராய்க்கி, வூட்ல சொல்ட்டு வந்தியானு பாட்டு வாங்கனும்.

No comments:

Post a Comment