நம்மில் பலருக்கு ஒவ்வொரு வெற்றியும் பல விதமான தேல்விகளையும் அவமானங்களையும் அடைந்த பின்னரே கிடைக்கிறது. அந்த வெற்றி அடைந்த பின்னர் வரும் சந்தோசம் வரையறுக்க இயலாது.
தாமாஸ் ஆல்வா எடிசன் அவர்கள் மின்சார பல்பை கண்டுபிடிக்க முயன்று பலமுறை தோல்வியடைந்தார். ஒவ்வொரு தோல்வி முடிவில் மக்கள் அவரை ஏளனம் செய்தனர் அவரால் வெற்றி பெற இயலாது என எள்ளி நகை ஆடினர், அவர் அவர்களை பார்த்து கூரிய பதில் நான் ஒவ்வொரு முறையும் எந்தந்த உலோகமேல்லாம் பல்பு தயாரிக்க பயன்படாது என்பதை கற்றுக் கொள்கிறேன் என நேர்மறை சிந்தனையுடன் பதிலளித்தார் இறுதியில் மாபெரும் வெற்றியும் பெற்றார். ஆனால் நாம் ஒரு தோல்வியில் துவண்டு போய் விடுகிறோம். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான வழி என நினைப்பதில்லை.
இந்த பரபரப்பான வாழ்க்கையில் நாமும் நம் குழந்தைகளை வெற்றி மட்டுமே பெற வேண்டும் என கூறி அவர்களை தோல்வியால் கிடைக்கும் அனுபவங்களையும் படிப்பினைகளையும் பறித்துவிடுகிறோம். இதனால் தான் என்னவோ அவர்களால் சிறு தோல்விகளையும் கையால இயலாமல் வாழ்க்கையை மாய்த்துக் கொள்கின்றனர்.
நினைவில் இருக்கட்டும் பலமுறை கீழே விழுந்தது தான் நாம் நடக்க பழகி கொள்கிறோம் அதுபோல ஒவ்வொரு தோல்வியுமே நம்ம பக்குவப்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வழிவகுக்கிறது.
எனவே தோற்போம்!!! வெல்வோம்!!!
No comments:
Post a Comment