எமோஷனல் இன்டலிஜன்ஸ் (EI) அதாவது உணர்வுசார்ந்த அறிவு என்பது நம்முடைய மற்றும் பிறரின் மன நிலைகளை புரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தவாறு நடந்து கொள்வது. IQ (Intelligence Quotient) அதாவது நுண்ணறிவு இதன் வளர்ச்சி ஒரு குழந்தை பிறந்து ஆறு அல்லது ஏழு மாதத்திற்குள் நின்றுவிடும் ஆனால் இந்த உணர்வு சார்ந்த அறிவு நம்முடைய அனுபவங்களை பொறுத்து வளர்கிறது.
தற்போதைய சூழலில் இந்த EI கார்ப்பரேட் உலகில் மிக முக்கியமான இடங்களை பூர்த்தி செய்ய நேர்காணலில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடினமான சூழ்நிலை சம்பந்தப்பட்ட கேள்விகள் மூலம் அவர்களின் EI மதிப்பிட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஏன் இது அவசியம்??? தற்போதைய சூழலில் பல மேனேஜர்கள் அவர்களின் கீழ் பணிபுரியும் மக்களை சரியாக அணுகுவதில்லை. இதனால் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கம்பெனிகள் இழக்க நேரிடுகிறது மற்றும் கம்பெனிகள் நற்பெயரையும் இழக்கிறது.
அடுத்த பதிவில் மனிதர்கள் அணுகுமுறைகளைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.
நட்புடன்,
உங்களின் ஒருவன்
No comments:
Post a Comment