Friday, December 22, 2017

மனிதர்கள் பலவிதம்


    மனிதர்கள் வித்தியாசமானவர்கள்,வெவ்வேறு கொள்கைகளையும், தனி பண்புகளையும் கொண்டவர்கள். எளிதில் அவர்களை புரிந்து கொள்ள இயலாது. அவர்களின் செயல்பாட்டுத்திறன் மற்றும் குணங்களை கொண்டு அவர்களை நான்கு வகைப்படுத்தலாம்.


  1. இயக்குபர்வகள் (Driver)
  2. பாகுபாய்பவர்கள் (Analytical) 
  3. சுமுகமானவர்கள் (Amiable)
  4. வெளிப்டையானவர்கள் (Expressive)



 

1. இயக்குபர்வகள்(Driver)

இயக்குபர்வகள் சவால்களை விரும்புவர்கள், வலிமையான மனதை கொண்டவர்கள், சுற்றிவளைத்து பேச விரும்பாதவர்கள், நேரிடையாக பேச விரும்புவர்கள், கட்டளைகளை பின்பற்றுபவர்கள், கடினமானவர்கள், சீக்கிரமாக முடிவு எடுக்கக்கூடியவர்கள் மற்றும் வெற்றியை மட்டும் இலக்காக கொண்டவர்கள் (Result Oriented). இவர்கள் பெரும்பாலும் மேனேஜர்களாக இருப்பார்கள்.


2. பாகுபாய்பவர்கள் (Analytical)

பாகுபாய்பவர்கள் அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டும் என விரும்புவர்கள், சரியான ஆவணங்கள் மற்றும் முறையான செய்முறைகளை  விரும்புவர்கள், அதிகப்படியான விளக்கங்களையும் மற்றும் செயல்முறையும் கேட்பார்கள்,கட்டுப்படக்கூடியவர்கள், துல்லியமானவர்கள், முறையானவர்கள், ஒழுக்கமானவர்கள். இவர்கள் பெரும்பாலும் அறிவியல் விஞ்ஞானிகளாகவும் மற்றும் ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பார்கள்.          
 
3. சுமுகமானவர்கள் (Amiable)

இவர்கள் பெரும்பாலும் நம்பகமானவர்கள், விசுவாசமானவர்கள், எளிதானவர்கள். அவர்கள் அச்சுறுத்தாத மற்றும் நட்புசார்ந்த   விஷயங்களை விரும்புவார்கள். விரைவில் முடிவு எடுக்கக்கூடியவர்கள், அவர்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும்  கடின உண்மைகளை  கையாள்வதை விரும்பாதவர்கள். பிறரின் உணர்வுகளை மதிப்பவர்கள், அமைதியானவர்கள், பொறுமைசாலிகள், அப்பாவிகள் (innocents), எதிர்த்து பேசாதவர்கள்.

 4. வெளிப்டையானவர்கள் (Expressive)

மிகவும் வெளிப்படியானவர்கள், யோசனை களஞ்சியங்கள், மிகவும் பேச விரும்புவார்கள், ஆர்வமானவர்கள், சுமுகமானவர்கள் மற்றும் சமூகத்துடன் ஒன்றியவர்கள். அனைவர்க்கும் உதவி செய்யும் மனம்கொண்டவர்கள், மிகவும் பொறுமையாக முடிவு எடுப்பவர்கள் அந்த முடிவு பிறரை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். பேச்சாளர்கள் மற்றும் மனிதநேயம் மிக்கவர்கள், பிறரை ஊக்குவிப்பவர்கள்.  


இந்த நான்கு வகையான மனிதர்களை புரிந்து கொண்டால் அவர்களை எளிதாக கையாலாம். மீண்டும் சந்திப்போம்!!    


No comments:

Post a Comment