Sunday, December 24, 2017

ஸ்மார்ட்போன் இல்லாத உலகம்





     ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது அவை இல்லாமல் இந்த வாழ்க்கை ஓடாது என்றளவுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டது. கைக்கு அடக்கமான செல்லுலார் போனில் இருந்து இப்போது கைக்கு அடங்காத ஸ்மார்ட்போனாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் ஒரு சிறிய கற்பனை.


  1. மாத ரிச்சார்ஜ் செலவு குறையும். டேட்டாவிட்கு செலவு இல்லை 
  2. இந்த வாட்ஸாப் போர்வேற்ட் (forward) தொந்தரவு இல்லை.
  3. மூஞ்சிபுக் (facebook) கேம் ரெக்குஸ்ட் (Request) யிலிருந்து விடுதலை.
  4. தவறான தகவல்களிருந்து (fake messages)  விடுதலை.
  5. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடலாம்.
  6. மனைவியிடம் திட்டு வாங்க வேண்டியதில்லை.
  7. அம்மாக்கள் குழந்தைகளுக்கு  நிலவைக்காட்டி சோறு ஊட்டலாம், அப்பாக்கள் பக்கத்துவீட்டு கலாவைகாட்டி சோறு ஊட்டலாம் :p 
  8. புத்தகங்களை வாங்கி படிக்கலாம் (Hard copy)
  9. பொய்யாக பரப்பப்படும் மத கலவரங்கள் குறையும்             
  10. அம்மாக்கள் மற்றும் மனைவிகள்  எல்லாம் ஜுரம் தலைவலிக்கு வேற காரணங்கள் தேட நேரிடும் (இந்த ஸ்மார்ட்போன் நோன்றதாலதான் உனக்கு ஜுரம் வருது )
  11. ஆபீஸ் மெயில்களிலிருந்து விடுதலை
  12. இந்த வாட்ஸாப்ப் குரூப்பிலிருந்து விடுதலை



இவைகள் எல்லாம் எனக்கு தோன்றியவை உங்களுக்கு எதாவது தோன்றினால் கீழே கமெண்ட் செய்யவும்.         

No comments:

Post a Comment