காலேஜ்ல ஆரம்பிப்பிச்சு வேலை செய்யுற ஆபீஸ்வரை படம் போடாதே ஆளுங்களே இல்லை அதாங்க பவர் பாயிண்ட் ப்ரெசென்ட்டேஷன் பண்ணாத ஆளே இல்லை, அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கைல பில் கேட்ஸ் அண்ணனோட மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் முக்கிய இடத்த பிடிக்குது. இந்த கார்பொரேட் வாழ்க்கைல படம் போடுறவனுக்கு தான் மரியாதை, வாயில வடைசுடுறவனுக்கு தான் மவூசு.
இப்படிதான் ஒருதடவ என்கூட வேலைசெய்யுற நண்பர்கிட்ட இந்த கார்பொரேட் வாழ்க்கைல முன்னேற என்ன பண்ணனும்னு கேட்டேன் அதுக்கு அவரு "ஒன்னு மோடியா இரு இல்லை மூடிட்டு இரு சொல்லிட்டாரு" (நான் ஆன்டி நேஷனல் இல்லிங்கோ). மீட்டிங் என்றா பேருல நாலு மணிநேரம் ஒக்கரவச்சி மூச்சி திணற திணற அடிக்கிறாங்கப்பா!!!!
ஆனாலும் இந்த மீட்டிங்கில சில பேரு போடுற ப்ரெசென்ட்டேஷன்க்கு எவ்ளோ அழாக தூக்கம் வரும் தெரியுமா??? நம்ப அம்மா கூட நம்பள அந்த அளவுக்கு தாலாட்டி இருக்க மாட்டாங்க. அந்த புண்ணியங்களுக்கு இந்த ப்லோகின் மூலம் நன்றிகளை கூறிக்கொண்டு விடைபெறுறேன்.
இப்படிக்கு,
கார்பொரேட் போராளி.
No comments:
Post a Comment