Tuesday, December 26, 2017

பவர் பாயிண்ட் ப்ரெசென்ட்டேஷன் (PowerPoint Presentation)

   







     காலேஜ்ல ஆரம்பிப்பிச்சு வேலை செய்யுற ஆபீஸ்வரை படம் போடாதே ஆளுங்களே இல்லை அதாங்க  பவர் பாயிண்ட் ப்ரெசென்ட்டேஷன் பண்ணாத ஆளே இல்லை, அந்த அளவிற்கு நம்முடைய வாழ்க்கைல பில் கேட்ஸ் அண்ணனோட மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் முக்கிய இடத்த பிடிக்குது. இந்த கார்பொரேட் வாழ்க்கைல படம் போடுறவனுக்கு தான் மரியாதை, வாயில வடைசுடுறவனுக்கு தான் மவூசு.

     இப்படிதான் ஒருதடவ என்கூட வேலைசெய்யுற நண்பர்கிட்ட இந்த கார்பொரேட் வாழ்க்கைல முன்னேற என்ன பண்ணனும்னு கேட்டேன் அதுக்கு அவரு "ஒன்னு மோடியா இரு இல்லை மூடிட்டு இரு சொல்லிட்டாரு" (நான் ஆன்டி நேஷனல் இல்லிங்கோ). மீட்டிங் என்றா பேருல நாலு மணிநேரம் ஒக்கரவச்சி மூச்சி திணற திணற அடிக்கிறாங்கப்பா!!!!

    ஆனாலும் இந்த மீட்டிங்கில சில பேரு போடுற ப்ரெசென்ட்டேஷன்க்கு எவ்ளோ அழாக தூக்கம் வரும் தெரியுமா??? நம்ப அம்மா கூட நம்பள அந்த அளவுக்கு தாலாட்டி இருக்க மாட்டாங்க. அந்த புண்ணியங்களுக்கு இந்த ப்லோகின் மூலம் நன்றிகளை கூறிக்கொண்டு விடைபெறுறேன்.

இப்படிக்கு,
கார்பொரேட் போராளி.            

Sunday, December 24, 2017

ஸ்மார்ட்போன் இல்லாத உலகம்





     ஸ்மார்ட்போன் நம் வாழ்வில் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது அவை இல்லாமல் இந்த வாழ்க்கை ஓடாது என்றளவுக்கு நம்மை அடிமையாக்கிவிட்டது. கைக்கு அடக்கமான செல்லுலார் போனில் இருந்து இப்போது கைக்கு அடங்காத ஸ்மார்ட்போனாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இல்லாத உலகம் எப்படி இருக்கும் ஒரு சிறிய கற்பனை.


  1. மாத ரிச்சார்ஜ் செலவு குறையும். டேட்டாவிட்கு செலவு இல்லை 
  2. இந்த வாட்ஸாப் போர்வேற்ட் (forward) தொந்தரவு இல்லை.
  3. மூஞ்சிபுக் (facebook) கேம் ரெக்குஸ்ட் (Request) யிலிருந்து விடுதலை.
  4. தவறான தகவல்களிருந்து (fake messages)  விடுதலை.
  5. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடலாம்.
  6. மனைவியிடம் திட்டு வாங்க வேண்டியதில்லை.
  7. அம்மாக்கள் குழந்தைகளுக்கு  நிலவைக்காட்டி சோறு ஊட்டலாம், அப்பாக்கள் பக்கத்துவீட்டு கலாவைகாட்டி சோறு ஊட்டலாம் :p 
  8. புத்தகங்களை வாங்கி படிக்கலாம் (Hard copy)
  9. பொய்யாக பரப்பப்படும் மத கலவரங்கள் குறையும்             
  10. அம்மாக்கள் மற்றும் மனைவிகள்  எல்லாம் ஜுரம் தலைவலிக்கு வேற காரணங்கள் தேட நேரிடும் (இந்த ஸ்மார்ட்போன் நோன்றதாலதான் உனக்கு ஜுரம் வருது )
  11. ஆபீஸ் மெயில்களிலிருந்து விடுதலை
  12. இந்த வாட்ஸாப்ப் குரூப்பிலிருந்து விடுதலை



இவைகள் எல்லாம் எனக்கு தோன்றியவை உங்களுக்கு எதாவது தோன்றினால் கீழே கமெண்ட் செய்யவும்.         

Friday, December 22, 2017

மனிதர்கள் பலவிதம்


    மனிதர்கள் வித்தியாசமானவர்கள்,வெவ்வேறு கொள்கைகளையும், தனி பண்புகளையும் கொண்டவர்கள். எளிதில் அவர்களை புரிந்து கொள்ள இயலாது. அவர்களின் செயல்பாட்டுத்திறன் மற்றும் குணங்களை கொண்டு அவர்களை நான்கு வகைப்படுத்தலாம்.


  1. இயக்குபர்வகள் (Driver)
  2. பாகுபாய்பவர்கள் (Analytical) 
  3. சுமுகமானவர்கள் (Amiable)
  4. வெளிப்டையானவர்கள் (Expressive)



 

1. இயக்குபர்வகள்(Driver)

இயக்குபர்வகள் சவால்களை விரும்புவர்கள், வலிமையான மனதை கொண்டவர்கள், சுற்றிவளைத்து பேச விரும்பாதவர்கள், நேரிடையாக பேச விரும்புவர்கள், கட்டளைகளை பின்பற்றுபவர்கள், கடினமானவர்கள், சீக்கிரமாக முடிவு எடுக்கக்கூடியவர்கள் மற்றும் வெற்றியை மட்டும் இலக்காக கொண்டவர்கள் (Result Oriented). இவர்கள் பெரும்பாலும் மேனேஜர்களாக இருப்பார்கள்.


2. பாகுபாய்பவர்கள் (Analytical)

பாகுபாய்பவர்கள் அனைத்தும் ஒழுங்காக இருக்க வேண்டும் என விரும்புவர்கள், சரியான ஆவணங்கள் மற்றும் முறையான செய்முறைகளை  விரும்புவர்கள், அதிகப்படியான விளக்கங்களையும் மற்றும் செயல்முறையும் கேட்பார்கள்,கட்டுப்படக்கூடியவர்கள், துல்லியமானவர்கள், முறையானவர்கள், ஒழுக்கமானவர்கள். இவர்கள் பெரும்பாலும் அறிவியல் விஞ்ஞானிகளாகவும் மற்றும் ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பார்கள்.          
 
3. சுமுகமானவர்கள் (Amiable)

இவர்கள் பெரும்பாலும் நம்பகமானவர்கள், விசுவாசமானவர்கள், எளிதானவர்கள். அவர்கள் அச்சுறுத்தாத மற்றும் நட்புசார்ந்த   விஷயங்களை விரும்புவார்கள். விரைவில் முடிவு எடுக்கக்கூடியவர்கள், அவர்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும்  கடின உண்மைகளை  கையாள்வதை விரும்பாதவர்கள். பிறரின் உணர்வுகளை மதிப்பவர்கள், அமைதியானவர்கள், பொறுமைசாலிகள், அப்பாவிகள் (innocents), எதிர்த்து பேசாதவர்கள்.

 4. வெளிப்டையானவர்கள் (Expressive)

மிகவும் வெளிப்படியானவர்கள், யோசனை களஞ்சியங்கள், மிகவும் பேச விரும்புவார்கள், ஆர்வமானவர்கள், சுமுகமானவர்கள் மற்றும் சமூகத்துடன் ஒன்றியவர்கள். அனைவர்க்கும் உதவி செய்யும் மனம்கொண்டவர்கள், மிகவும் பொறுமையாக முடிவு எடுப்பவர்கள் அந்த முடிவு பிறரை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். பேச்சாளர்கள் மற்றும் மனிதநேயம் மிக்கவர்கள், பிறரை ஊக்குவிப்பவர்கள்.  


இந்த நான்கு வகையான மனிதர்களை புரிந்து கொண்டால் அவர்களை எளிதாக கையாலாம். மீண்டும் சந்திப்போம்!!    


Thursday, December 21, 2017

உணர்வுசார்ந்த அறிவு (Emotional Intelligence)




       எமோஷனல் இன்டலிஜன்ஸ் (EI) அதாவது உணர்வுசார்ந்த அறிவு என்பது நம்முடைய மற்றும் பிறரின் மன நிலைகளை புரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தவாறு நடந்து கொள்வது. IQ (Intelligence Quotient) அதாவது நுண்ணறிவு இதன் வளர்ச்சி ஒரு குழந்தை பிறந்து ஆறு அல்லது ஏழு மாதத்திற்குள் நின்றுவிடும் ஆனால் இந்த உணர்வு சார்ந்த அறிவு நம்முடைய அனுபவங்களை பொறுத்து வளர்கிறது.
       
      
       தற்போதைய சூழலில் இந்த EI கார்ப்பரேட் உலகில் மிக முக்கியமான இடங்களை பூர்த்தி செய்ய நேர்காணலில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடினமான சூழ்நிலை சம்பந்தப்பட்ட கேள்விகள் மூலம் அவர்களின் EI மதிப்பிட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள்.


      ஏன் இது அவசியம்??? தற்போதைய சூழலில் பல மேனேஜர்கள் அவர்களின் கீழ் பணிபுரியும் மக்களை சரியாக அணுகுவதில்லை. இதனால் தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை கம்பெனிகள் இழக்க நேரிடுகிறது மற்றும் கம்பெனிகள் நற்பெயரையும் இழக்கிறது.

      
அடுத்த பதிவில் மனிதர்கள் அணுகுமுறைகளைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.


நட்புடன்,
உங்களின் ஒருவன்

Wednesday, December 20, 2017

வெற்றியும் தோல்வியும்

     

     நம்மில் பலருக்கு ஒவ்வொரு வெற்றியும் பல விதமான தேல்விகளையும் அவமானங்களையும் அடைந்த பின்னரே கிடைக்கிறது. அந்த வெற்றி அடைந்த பின்னர் வரும் சந்தோசம் வரையறுக்க இயலாது.

    தாமாஸ் ஆல்வா எடிசன் அவர்கள் மின்சார பல்பை கண்டுபிடிக்க முயன்று பலமுறை தோல்வியடைந்தார். ஒவ்வொரு தோல்வி முடிவில் மக்கள் அவரை ஏளனம் செய்தனர் அவரால் வெற்றி பெற இயலாது என எள்ளி நகை ஆடினர், அவர் அவர்களை பார்த்து கூரிய பதில் நான் ஒவ்வொரு முறையும் எந்தந்த உலோகமேல்லாம் பல்பு தயாரிக்க பயன்படாது என்பதை கற்றுக் கொள்கிறேன் என நேர்மறை சிந்தனையுடன் பதிலளித்தார் இறுதியில் மாபெரும் வெற்றியும் பெற்றார். ஆனால் நாம் ஒரு தோல்வியில் துவண்டு போய் விடுகிறோம். ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான வழி என நினைப்பதில்லை.

    இந்த பரபரப்பான வாழ்க்கையில் நாமும் நம் குழந்தைகளை வெற்றி மட்டுமே பெற வேண்டும் என கூறி அவர்களை தோல்வியால் கிடைக்கும் அனுபவங்களையும் படிப்பினைகளையும் பறித்துவிடுகிறோம். இதனால் தான் என்னவோ அவர்களால் சிறு தோல்விகளையும் கையால இயலாமல் வாழ்க்கையை மாய்த்துக் கொள்கின்றனர்.

    நினைவில் இருக்கட்டும் பலமுறை கீழே விழுந்தது தான் நாம் நடக்க பழகி கொள்கிறோம் அதுபோல ஒவ்வொரு தோல்வியுமே நம்ம பக்குவப்படுத்தி வாழ்வில் வெற்றிபெற வழிவகுக்கிறது.        
                                 
                                  எனவே தோற்போம்!!! வெல்வோம்!!!

Tuesday, December 19, 2017

இஞ்சினியர்







      +2 முடிச்சதுக்கு அப்புரம் வாழ்க்கையில எதையாவது சாதிக்கனும் நினைக்கும் போது மனசுல பட்டுனு தோனுனது இஞ்சினியரிங். அப்புறம் அதில என்ன படிக்கனும்னு யோசிக்கும் போது மூளையில உதிச்சது கம்பியூட்டர் சயின்ஸ் அதுக்கப்புறம் அண்ணனின் ஆணைக்கு இனங்க எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் எடுத்துட்டு.


     அதை முடிக்க பட்ட கஷ்டம் கெஞ்சமா நஞ்சமா. கண்ணுக்கு தெரியாத ஓல்டேஜ்ஜையும், கரண்டையும் மக் அடிச்சி அந்த 64 தடைகளையும் தாண்டி இஞ்சினியரிங் முடிச்சிட்டு வேலைக்காக லோ லோனு அலைஞ்சு கடைசிய கார்ப்பரேட்ல இஞ்சினியரா ஜாயின் பண்ணி குப்ப கொட்றங்கோ!!!


      வடிவேல் ஸ்டைல சொல்லானும்னா எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் நல்லவர்கள் நான்!



இப்படிக்கு,
அப்பாவி இஞ்சினியர்

Monday, December 18, 2017

வாய்விட்டு சிரிங்க






    அமைதியை கண்டு பொங்குறோமோ இல்லையோ ஆனா மனைவி நம்மள பார்த்துக் கொள்ள சொன்ன பால் பொங்கும் போது நாம பொங்கி போயி அனைக்கிலைனா நமக்கு பொங்கல் தான் மாப்ள!!!


   ஏழு ஜென்மத்துக்கு முன்னாடி நாம்  மனைவியை தவிர வேறு யாராலும் துல்லியமா சொல்ல முடியாது!!
அடங்கப்பா என்னா ஞாபக சக்தி!!


   பெண்கள் அவங்க கணவன் சோட்டா பீம் போல இருக்கணும்னு எதிர்பார்கிறாங்க ஆன நிஜத்தில் எல்லோரும் காளியா தான்.


   அனேகமா இந்த கிரிக்கேட்ட பெண்டாட்டிகிட்ட அடிவாங்குன எவனோதான் கண்டுபிடிச்சிருக்கனும்னு பச்சி சொல்லுது!
#அந்த பூரிகட்டையை கண்டுபிடிச்ச புண்ணியவான் வாழ்க


    இந்த ஷாப்பிங் போன மனைவியும் பாசஞ்சர் ரயிலும் ஒன்னுங்க. ஏன்னா இந்த  இரண்டுமே எல்லா இடத்திலும் நின்னுட்டு தான் போகும்.

   
கல்யாணம் பண்ணணும்னா ஒன்னு கட்டதுறை மாதிரி உடல் வலிமையா இருக்கனும் இல்ல கைப்புள்ள மாதிரி கால்ல விழ தெரிஞ்சிருக்கனும்!!


    மன்னிப்பு ரமணாக்கு வேணும்னா பிடிக்காத வார்த்தையா இருக்கலாம் ஆனால் எல்லா கணவன்களுக்கும் மிகவும் பிடித்த வார்த்தை மற்றும் சோறு போடும் வார்த்தை

Saturday, December 16, 2017

டிஜிட்டல் தடயம் (Digital Footprint)







      நாம் இணைய தளத்தில் பதியும் தகவல் ஏதாவது ஓரிடத்தில் பதியப்படுகிறது அதை சில கருவிகள் மற்றும் ஹாக்கிங் அறிவுள்ள யாரும் எப்பொழுது வேண்டுமானாலும் திருடலாம்  இணையத்தில் எந்த தகவலையும் நிரந்தரமாக அழிக்க முடியாது.


     நான் அன்றாடம் பயன்படுத்தும் வங்கி பரிவர்த்தனைகள், ஆன்லைன் சாப்பிங், பேஸ்புக், வாட்சாப் தகவல்கள் அனைத்தும் இதற்க்கு விதிவிலக்கல்ல. Identify theft எனப்படும் ஆள்மாராட்டங்கள் இந்த டிஜிட்டல் தகவல்கள் மூலம் செவ்வனே நடைபெறுகின்றன.


     நீங்கள் என்றாவது யோசித்ததுண்ட நாம் கூகுளின் சற்றுமுன் தேடிய விவரங்கள் அனைத்தும் நாம் தற்சமயம் பார்க்கும் வெப்சைட்டில் விளம்பரமாக தெரியும் என்று. இதுதான் கூகுளின் வியாபாரம் ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு " Nothing is free in this world" இந்த உலகத்தில் இலவசம் என்பதே கிடையாது. இலவசமாக வரும் அனைத்தும் மறைமுகமாக எதையாவது கொண்டிருக்கும்.


    இதை நாம் தடுக்க இயலாது ஆனால் விழிப்புணர்வுடன் இருந்து நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்கலாம். எப்படி
1. உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை (Personal Information) இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும்.
2. ‎புரவுசிங் சென்டர்களின் வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளை தவிர்க்கவும்.
3. ‎ஆன்லைன் பரிவர்த்தனைகளின் போது "https//" உள்ளனவா என உங்கள் புரவுசரில் சரிபாருங்கள்.


    இவைகள் ஓரளவிற்கு உங்கள் தகவல்களை திருப்படுவதை தவிர்க்கும்.
Remember "Internet is not safe and it is vulnerable to hacking"

Friday, December 15, 2017

நான் நாகரிக கோமாளி




சாலையில் நடைபாதையில் நடக்கும் நான் ஒரு நாகரிக கோமாளி

தெருவில் குப்பைத்தொட்டியில் குப்பைபோடும் நான் ஒரு நாகரிக கோமாளி

சிக்னலில் சிகப்பு விளக்கில் நிற்க்கும் நான் ஒரு நாகரிக கோமாளி

பூச்சிக்கொள்ளி குளிர்பானம் அருந்தாமல் தெருக்கடையில் தேநீர் அருந்தும் நான் ஒரு நாகரிக கோமாளி

சாலையில் அடிபட்டு பரிதவிக்கும் மனிதனுக்கு உதவி செய்யும் நான் ஒரு நாகரிக கோமாளி

பொது இடத்தில் சிறுநீர் கழிக்காமல் கழிப்பறை செல்லும் நான் ஒரு நாகரிக கோமாளி

தெருவில் எச்சி துப்பாமல் செல்லும் நான் ஒரு நாகரிக கோமாளி

பிறருக்கு இடையூறு இழைக்காமல் வீடு திரும்பும் நான் எப்போழுதுமே ஒரு நாகரிக கோமாளி

Thursday, December 14, 2017

டிராஃபிக் சிக்னல்

      
    சென்னை போன்ற மாநகரத்தில் இது எதற்க்கு இருக்குன்னே தெரியல, பல பேருக்கு இந்த சிக்னல்ல இருக்கிற கலருக்கு அர்த்தம் தெரியுமானே தெரியல. நம்ம பொருத்த வரைக்கும் பச்சைனா அசுர வேகம், ஆரஞ்சுனா அதீத வேகம், சிகப்புனா மித வேகம்.

     இந்த மாதிரி மாநகரில வண்டி ஓட்ட நம்ம மக்கள் சில விதிமுறை வச்சிருக்காங்க.
1. யாருக்கும் வழிவிடக்கூடாது
2. ‎சிக்னலுக்கு முந்திக்கணும்
3. ‎போலிஸ் இருந்த நில்லு இல்ல கிளம்பு
4. ‎ஆம்புலன்ஸ பாலோ பண்ணணும்

    இந்த வழிமுறைகளை மின்பற்றலனா யாருகிட்டையாவது சாவு கிராய்க்கி, வூட்ல சொல்ட்டு வந்தியானு பாட்டு வாங்கனும்.

தூதுவன்

        




      நம்ம என்னதான் வாய மூடிட்டு பேசாம இருந்தாலும் சில தருணத்தில் அறியாமல் ஏதாவது சுடு சொல் சொல்லிடுறம். அதுவும் நம்ம மனசுக்கு பிடிச்சவங்கனா சொல்லவே வேணாம் ஒரே பீலிங் தான் அந்த நேரத்தில யாரு முதல்ல பூனைக்கு மணி கட்டுறது அதாங்க மன்னிப்பு கேட்கிறது அதுக்கு ஒரு மன போராட்டமே நடக்கும்.

    அந்த சமயத்தில் வெக்கத்த விட்டுட்டு மன்னிப்பு கேட்க நமக்கு உதவுறது இந்த வாட்சாப். கணவன்களுக்கு வாட்சாப் ஒரு வரப்பிரசாதம், கடலை போடுறவனுக்கு இது ஒரு டைம் பாஸ், காதலிக்கிறவணுக்கு இது தான் உலகம், வெளிநாட்டில் வாழ்பவணுக்கு இது பொக்கிசம்.


"அனலாய் கொப்பளித்த அந்த அரை மணி நேர இறுதியில் சிணுங்கியது அவன் கைப்பேசி மன்னிப்பு என்ற குறுஞ்செய்தியைத்தாங்கி"

Wednesday, December 13, 2017

அப்ரைசல் மீட்டிங்





       இந்த வார்த்தைய கேக்குற சில பேருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஆனா பல பேருக்கு பில்டிங் ஸ்டாங்கு ஆனா பேஸ்மண்ட் வீக்கு என்ற பீலிங் தான். ஏன்னா நம்ம கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிருந்தாலும் இந்த மீட்டிங்ள நம்மள பஞ்சு பஞ்சா கிழிச்சு எடுத்திடுவாங்க.

     இந்த மீட்டிங்கும் இஞ்சினியரிங் காலேஜ் வைவா போல தான் நம்ம என்னதான் தெக்கி தெனறி பதில் சொன்னாலும் அவங்க போடுற தான் போடுவாங்க. எப்படியும் நமக்கு இந்த வருசம் வெறும் பஞ்ச படி பயண படிதான்.


இப்படிக்கு,
கார்பரேட் போராளி

Tuesday, December 12, 2017

மனைவியியல்

  நம்ம வாழ்க்கைல எவ்ளோ பெரிய ஆள இருந்தாலும் இந்த ரெண்டு பேரு கிட்ட  அடங்கி தான் போகணும் ஒன்னு அம்மா, ரெண்டாவது மனைவி. அம்மா கூட வழக்கை முழுசா இருக்கிற காலம் கம்மிதான் ஆனா மனைவி கூட தான் ரொம்ப நாள் வாழனும்.

இதுல  பாதி நாள் அவங்கள புரிஞ்சிகிக்கவே பத்தாது மீதி சண்டை தான். என்ன தான் சண்டை போட்டாலும் நம்ப வாழ்க்கைல ரொம்ப முக்கியமான பங்காவே அவங்க இருக்காங்க. சில நேரத்துல நம்ப வாண்டடா போயி வாய புண்ணாக்கிகிரோம். அதனால தான் பெரியவங்க சொன்னகங்க "மனைவி கம்ம்னு இருக்கும்போது நீ உம்ம்ன்னு இருக்கணும்னு".

அதாகப்பட்டது மக்களே ஓவரா பேசுனா அப்புறம் ஏழு ஜென்மத்துக்கு முன்னாடி பேசுனத எல்லாம் ரொம்ப துல்லியம பேசி சோழிய முடிச்சிடுவாங்க. அதனால Be Carefull

இப்படிக்கு,

அப்பாவி கணவன்.